தைப்பூசத் திருநாள் 18-01-2022
அம்பிகை அடியார்களே
லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் தைப்பூசத்திருநாள் விசேட பூசை 18.01.2022 செவ்வாய்க்கிழமை மாலை 17:30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாக துர்க்கை அம்மன் திருவருளும் செந்தமிழ்ப்பெருமான் அருட்கருணையும் கைகூடியுள்ளது.
17:00 கும்பபூசை 18:15 பூசை ஆரம்பம் 20:00 வீதியுலா வருதல்
‘
17:30 அபிசேகம் 19:00 வசந்தமண்டபபூசை 20:45 வீபூதி பிரசாதம்
குழந்தைகளுக்கு ஏடு தொடக்குதல், அன்னமூட்டுதல், ஆயகலைகளை ஆரம்பித்தல் போன்றவைகளை செய்ய விரும்புவோர் ஆலயத்துடன் தொடர்பு கொள்ளவும்.
இத் சைவத்திருநாளில் விரதம் இருந்தும், விசேட அபிசேக ஆராதனைகளிலும் எம் பெருமான் உள் வீதி வலத்திலும் கலந்துகொண்டு உலகில் அமைதி நிலவி சீருடனும் சிறப்புடனும் எல்லோரும் வாழ எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருளாசி வேண்டி பிரார்த்தித்து கந்தப்பெருமானின் அபிசேக ஆராதனைகளில் அபிசேக திரவியங்களையும் பூசை பொருட்களை வழங்கி அம்பாளினதும் ஆறுமுகப்பெருமானினதும் திருவருள் பெற்று பேரானந்த பெருவாழ்வு வாழ்வீர்களாக.
உபயம் திரு திருமதி தி. சின்னத்தம்பி (சிவா) குடும்பம் Hitzkirch / LU