No comments yet

தைப்பொங்கல் – 14.01.2022

அம்பிகை அடியார்களே!

நிகழும் சர்வமங்களகரமான பிலவ வருடம் தைத்திங்கள் 1ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2052 (14.01.2022) வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் திருநாளாகும். இத்திருநாளில் லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. அடியவர்கள் தைத்திருநாளன்று வருகை தந்து நடைபெறும் அபிசேகம், பூசை, பொங்கல் நிகழ்விலும் கலந்து சிறப்பித்து தாயக உறவுகளின் விடிவிற்கும் பிரார்த்தித்து இஸ்டசித்திகளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டிக் கொள்கின்றோம்.

காலை 09:00 மணி அபிசேகம்

காலை 10:00 மணி பொங்கல்

மாலை 17:30 மணி பொங்கல்

மாலை 19:00 மணி விசேட பூசை

உபயம் திருமதி தர்மகுலசிங்கம் குடும்பம் Luzern

இவ்வண்ணம்

ஆலயபரிபாலன சபையினரும், அடியவர்களும்.

“நான் பெரிது நீ பெரிது என்று இல்லாமல் நாடு, மொழி ஆலயம் பெரிது என்ற அடிப்படையில் இணைவோம்’

Post a comment