இவ்விரதமானது அம்பிகை சிவனின் உடலில் தான் ஒரு பாதியாக இணைவதற்காக மேற்கொண்ட விரதமாகும். இத்தகைய சிறப்பு வாய்த்த இவ்விரதத்தை மேற்கொள்வதால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். புரட்டாசி மாதத்தில் வருகின்ற வளர்பிறை அஷ்டமியில் தொடங்கி, 21 நாட்கள் விரதத்தை தொடர்ந்து அமாவாசை நாளில் தீபாவளி அன்று நிறைவு பெறும். 21 நாட்கள் உபவாசம் இருந்து முறையாக இவ்விரதத்தினை அனுஷ்டிப்பது சிறப்பாகும்.
எனினும் உடல் நிலை முடியாதவர்கள் 9 அல்லது 3 நாட்களுக்கு முன்னர் இருந்து விரதமிருக்க தொடங்கலாம். அல்லது கடைசி நாள் மட்டும் விரதமிருக்காலம்.
சிவன் பார்வதி ஒன்றாக வீற்றிருக்கும் படம் அல்லது விக்ரகத்தை வைத்து பூக்களால் அலங்கரித்து தீபாதரனை காட்டி நைய்வேத்தியம் படைத்தது பூசை செய்ய வேண்டும். வீட்டில் கலசம் வைக்க முடிந்தவர்கள் கலசம் வைத்து வழிபடலாம்.
அம்பிகையின் நாமங்கள் மந்திரங்களை உச்சரித்து மனதார நம்பிக்கையுடன் வழிபட வேண்டும். நைய்வேத்தியங்களை படைக்கும் போது 21 எண்ணிக்கையில் வைக்க வேண்டும். காலை, பகல் வேளைகளில் உபவாசம் இருந்து மாலை அம்பாளுக்கு பூசை செய்து வழிபட்டு முடித்த பின்னர் அம்பாளுக்கு படைத்த பிரசாதங்களை உட்கொள்ளலாம். பின்னர் இரவில் இலேசான உணவுகளை உட்கொள்ளலாம்.