







லுட்சேர்ன் துர்க்கை அம்மன்

History of Our Temple

Geschichte unseres Tempels
லுட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம் – சுவிஸ்
“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது தமிழர்களின் வேதவாக்கு. இதற்கமைய, 1991ம் ஆண்டில் Emmenbrücke கிராமத்தில் இருந்த குடிபெயர்ந்த மக்களின் முகாமில் நவராத்திரி விழாவின் போது துர்க்கை அம்மனின் நிழல்வடிவத் திருவுருவம் வைத்து வழிபாட்டை ஆரம்பித்தனர். சுவிற்சலாந்தில் குடியேறிய தமிழர்களின் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து பக்தர்களின் தொகையும் உயர்ந்தது. இதனையடுத்து லுட்சேர்ன் நகரில் St.Garli கத்தோலிக்க தேவாலயத்தின் அருகில் துர்க்கையம்மன் குடி கொண்டிருக்கும் கோவிலாக இது உயர்ந்தது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சைவசமய வழிபாடுகளும் ஆன்மீக நற்சிந்தனை, கூட்டுப்பிரார்த்தனை என்பனவும் இங்கு நடைபெற்றது.


துர்க்கை அறக்கட்டளை “இயன்றவரை செய்வோம் இருக்கும் வரை”
துர்க்கை அம்மன் ஆலயமானது சுவிஸ் நாட்டிலும், தாயகத்திலும் மக்களுக்கான சேவையை ஆற்றிவருவது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். லுட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தின் துர்க்கை அறக்கட்டளை என்ற உதவியமைப்பினுடாக இயன்றவரை செய்வோம் இருக்கும் வரை என்ற தொனிப்பொருளுக்கு அமைய எமது நேரடி செயற்பாட்டில் வாழ்வாதாரம், கல்வி, மருத்துவம் போன்ற உதவித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
துர்க்கா-வளாகம் இன்வில்
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற மூதுரை வழி வாழ்ந்தும் தலைமுறை கடந்தும் சைவப் பெருமக்களின் சன்மார்க்க இறை வழிபாட்டிடமாகவும், சைவசமய பரம்பரையின் சாட்சியமாகவும் விளங்கவிருக்கும் துர்க்கை அம்மன் ஆலயம் 2080 சதுர மீற்றர் பரப்பளவில் இன்வில் என்னும் கிராமத்தில் நிரந்தர திருத்தலமாக அமையவுள்ளது.